நியுசிலாந்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி

நியூசிலாந்தின் ஆக்லாந் நகரத்தின் மத்தியில் உள்ள ‘Aotea Square, Queen Street”, என்னும் இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் நூற்றிற்கு மேற்பட்ட தமிழீழ உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நியூசிலாந்து தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் இணைப்பாளரும், நாடுகடந்த தமிழீழ அரசின் அமைச்சருமான வைத்தியகலாநிதி வசந்தன் அவர்கள் உரையாற்றினார்.

அவர் தனதுரையில், தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்து பத்தாண்டுகள் கடந்த நிலையிலும் தன்னெழிற்சியோடு தமிழ் மக்கள் தங்களுக்கான விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

newzealand நியுசிலாந்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணிசொந்த மண்ணிலே அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்து கொண்டு போராடிக் கொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக ஆதரவு தெரிவித்து நாம் நடாத்தும் இப்படியான போராட்டங்களின் ஊடாக உலகெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

தொடரந்து பதாகைகள் ஏந்தி நின்ற இளையோர்களால் இப்போராட்டம் பற்றி வேற்று நாட்டவர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டதுடன் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டது.