`நினைவழியா நாட்கள்` நூல் அறிமுகம்

`நினைவழியா நாட்கள்` நூல் அறிமுகம் கவிஞரும் தமிழாசிரியருமான சி.சிவதாஸின் தலைமையில் நோர்வேயில் இந்த வாரம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

தனது வாழ்வின் இளமையைத் தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்த பல்லாயிரம் போராளிகளில் குலம் ஒரு முன்னோடி. ஈழவிடுதலைப் போராட்டம் ஆரம்பித்த நாட்களில் இருந்து, முதன்முறை புலம்பெயர நேர்ந்த காலம்வரையான தனது வாழ்வின் நினைவுகளை நூலாக்கித் தமிழ் வாசகர்களோடு பகிர்ந்திருக்கிறார். அவர். இயக்கத்தில் தனக்கு இடப்பட்ட இளமாறன் என்ற பெயரில் அவர் எழுதிய நூல் பற்றி ஜெயஸ்ரீ பாலசுப்பிரமணியமும், கலாநிதி த.சர்வேந்திராவும் தமது பார்வைகளை முன்வைத்தனர்.

Kulam swiss `நினைவழியா நாட்கள்` நூல் அறிமுகம்நூலாசிரியருடனான உரையாடலாய் இடம்பெற்ற `நூற்பேச்சு` ஹம்சிகா பிரேம்குமார் (சட்ட, மருத்துவ மாணவர்) வழிப்படுத்தலில் மிகச் சிறப்பாய் அமைந்திருந்தது. இரண்டாம் தலைமுறையைச் சார்ந்த ஒருவர் முன்னோடிப் போராளி ஒருவரோடு சரளமாக உரையாடுவது இலகுவான ஒன்றல்ல. ஹம்சிகா அதை எந்தத் தடைகளும் இன்றி நிகழ்த்தியமை பலரையும் கவர்ந்தது.

முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய குல ததின் சகோதரி, ராஜேஸ்வரி வசந்தராஜன் தங்கள் வீட்டில் ஒருவராகப் பிரபாகரன் தலைமறைவு வாழ்ந்த நாட்களையும் அக்கால நெருக்கடிகளையும் நினைவுகூர்ந்தமை வெகு இயல்பான உரையாக அமைந்திருந்தது.

விடுதலைப் புலிகளின் சுவிஸ் பொறுப்பாளராய் நீண்டகாலம் பணிபுரிந்த குலமண்ணை என்கிற இளமாறனின் இந்த நூல் மிக எளிமையாக அவரது வார்த்தைகளில் காலத்தைப் பதிவு செய்கிறது. இவ்வாறே இன்னும் பல நூல்கள் வரவேண்டும் என்பதே பலரதும் விருப்பம்.