ஜனநாயகத்துக்கு எதிரான படையெடுப்பு – நிகழ்நிலை சட்டம் குறித்து பேஸ்புக் கண்டனம்

face book ஜனநாயகத்துக்கு எதிரான படையெடுப்பு - நிகழ்நிலை சட்டம் குறித்து பேஸ்புக் கண்டனம்இணைய குற்றங்களைத் தடுப்பதற்குப் பதிலாக, அரசங்கம் நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கும் இந்தச் சட்டத்தின் நோக்கம், ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரான படையெடுப்பாகவே கருத முடியும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று முதல் நிகழ்நிலை காப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. பல தரப்பினரின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டத்தை அரசாங்கம் நடை முறைப்படுத்தியுள்ளது.

70 வீதத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் இந்த சட்டம் பற்றி அறிந்திருக்கவில்லை. கூகுள், மெட்டா, பேஸ்புக் போன்ற நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு, இந்த சட்டம் அமுல்படுத்த முடியாத ஒரு சட்டம் எனக் கூறியுள்ளன.

இணைய குற்றங்களைத் தடுப்பதற்குப் பதிலாக, இந்தச் சட்டத்தின் நோக்கம், ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரான படையெடுப்பாகவே கருத முடியும் எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.