நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு புதிய வரிகள்

சிறீலங்கா அரசு தற்போது எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிகளை சமாளிப்பதற்காக சிறிய ரக வாகனங்களுக்கும் புதிய வரிகளை விதித்துள்ளது.

இதன் அடிப்படையில் 1,000 சி.சி இயந்திரம் கொண்ட சிறிய ரக கார் வாகனங்களை இறக்குமதி செய்பவர்களும் அதிக வரியை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வாகனத்தின் விலையை விட 15 விகித அதிக வரியை செலுத்த வேண்டியுள்ளதால் நடுத்தர வர்க்க மக்கள் அதிக பாதிப்புக்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னர் இத்தகைய வரிகள் ஆடம்பர பெரிய வாகனங்களுக்கே அறிவிடப்பட்டது.