நான் கூறியதை, இப்போது அனைவரும் கூறுகின்றனர்  -அமெரிக்க முன்னாள் அதிபர்

கொரோனா தொற்று சீனாவில் இருந்துதான் பரவத்தொடங்கியது   என்று நான் முன்னமே கூறினேன், அதையே இப்போது அனைவரும் கூறுகின்றனர் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும்   கூறியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தன் பதவிக்காலத்தில் கொரோனா வைரஸை சீனா வைரஸ் என்று பெயரிட்டது கடும் சர்ச்சைக்குள்ளானது. மேலும், உலகச் சுகாதார அமைப்பு சீனாவின்   இந்த செயலை  மூடி மறைக்கிறது என்று அதற்கான அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்துவதாகவும்  அறிவித்தார் ட்ரம்ப்.

தற்போது பல நாடுகள் கொரோனா வைரஸ் உருவாக சீனாவை காரணம் காட்டத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்,டொனால்டு ட்ரம்ப், “இப்போது அனைவரும், ஏன் பகைவர் முகாமிலும் கூட சீனா வைரஸ் வூகான் லேபிலிருந்து வெளியே கசிந்தது என்ற எனது கூற்றை ஆதரிக்கின்றனர்.

டாக்டர் ஃபாசிக்கும் சீனாவுக்கும் இடையேயான பரிமாற்றங்களும் இதை உறுதி செய்கின்றன, இதைப் புறக்கணிக்க முடியாத அளவுக்கு உரத்த குரலில் தற்போது சீனாதான் காரணம் என்று அனைவரும் கூறத்தொடங்கியுள்ளனர்.

சீனா, அமேரிக்காவுக்கு நஷ்ட ஈடாக 10 ட்ரில்லியன் டொலர்கள் அபராதம் செலுத்த வேண்டும். உலகிற்கும் சீனா வைரஸினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பலத்த சேதத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும், 10 ட்ரில்லியன் டொலர்கள் சீனா கொடுக்க வேண்டும்” என்றார்