தொலைபேசி ஊடாக பணம் பறிக்கும் குழு

சிறீலங்காவில் தொலைபேசி ஊடாக பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குழுவினர் தொலைபேசி ஊடாகவே பணப் பரிமாறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், புனித ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றப்பிரிவினரின் விசாரணகளில் இருந்து நீங்கள் தப்பவேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

25000 தொடக்கம் 50000 ரூபாய்கள் வரை அவர்கள் அறவிட்டுவருவதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.