துருக்கிக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்த நெதர்லாந்து முடிவு மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் அழைப்பு

வடக்கு சிரியாவில் குர்திஷ் படைகள் மீது அங்காரா தாக்குதல் நடத்தியதை அடுத்து துருக்கிக்கு அனைத்து ராணுவ ஆயுத ஏற்றுமதியையும் முடக்க நெதர்லாந்து முடிவு செய்துள்ளதோடு மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படையினர் மீது துருக்கி மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்காரா பகுதியில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்து வருவிதாக ஐநா தெரிவித்துள்ளது. இன்று காலை நடந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் யுத்தம் தொடங்கியதிலிருந்து மூன்றாவது முறையாக துருக்கியின் இதுபோன்ற நடவடிக்கை அமைந்துள்ளதாக சர்வதேச நாடுகளின் கண்டனத்திற்கு துருக்கி ஆளாகியுள்ளது.

ஐரோப்பாவின் மொத்த ஆயுத ஏற்றுமதியில் சுமார் எட்டு சதவீதம் நெதர்லாந்திலிருந்து சப்ளை செய்யப்படுவதாக ஆம்ஸ்டர்டாமை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் பிரச்சார அமைப்பான ஸ்டாப் வாபன்ஹாண்டலின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் முக்கியமாக டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களுக்கான பாகங்கள், தொழில்நுட்பம் மற்றும் போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கான பாகங்கள் ஆகியவை அடங்கும் என்று ஸ்டாப் வாப்பன்ஹண்டெல் 2017 இல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.