துமிந்தவை விடுவிக்கக்கோரும் மனுவில் கையொப்பமிட்டது எதற்காக – மனோ விளக்கம்

துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு கோரும் மனுவில் குறித்து கையெழுத்திட்டது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

“துமிந்தசில்வாவை விடுதலை செய்யவேண்டும் என கோரும் மனுவில் கைச்சாத்திடும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை அது சுயாதீன ஆவணம் ,எதிர்கட்சியில் உள்ள பலர் கைச்சாத்திட்டுள்ளனர் எங்கள் கட்சியை சேர்ந்தவர்களும் அதில் கையெழுத்திட்டுள்ளர்” என மனோகணேசன் தெரிவித்தார் என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அதனை பயன்படுத்த நினைத்தேன் அதற்காக அதில் கையெழுத்திட்டேன் என மனோகணேசன் தெரிவித்தார் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான வலுவான அழுத்தத்தினை கொடுக்கலாம் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவரது கட்சி அரசாங்கத்துடன் இணையவுள்ளதா அல்லது வரவுசெலவுதிட்டத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதா என்ற கேள்விக்கு அவ்வாறான திட்டமெதுவுமில்லை என மனோகணேசன் தெரிவிததுள்ளார்.

நாங்கள் இன்னமும் எதிர்கட்சியினதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஒரு பகுதியாக உள்ளோம்,நாங்கள் அரசாங்கத்துடன் இணையமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.