திருடப்பட்ட பொருட்களை கடனாக வழங்க பிரித்தானியா இணக்கம்

ஆபிரிக்க நாடான கானாவில் இடம்பெற்ற போரின் பின்னர் அந்த நாட்டு மன்னர்களின் தங்க ஆபரணங்கள் மற்றும் விலைஉயர்ந்த பொருட்களை பிரித்தானியா திருடி லண்டனில் உள்ள தனது காட்சியகத்தில் வைத்திருந்தது. ஆனால் தற்போது 150 வருடங்களின் பின்னர் அதனை நீண்டகால கடனாக வழங்க பிரித்தானியா அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக தங்க மற்றும் விலை உயர்ந்த 32 பொருட்களை கடனாக வழங்க அது திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் உருவாக்கப்பட்ட கலாச்சார இணக்கப்பாட்டின் இடிப்படையில் இது சாத்தியமானதாக கானா நாட்டின் பிரதம பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

திருடப்பட்ட பொருட்களை மீண்டும் கொடுப்பதற்கு தடைச்சட்டம் உள்ளது எனினும் அதனை நீண்டகால கடனாக வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.