தமிழ் மக்கள் மீதான போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா படையினருடன் இணைந்து பிரித்தானியா தனியார் நிறுவனத்தின் கூலிப்படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

1980 களில் சிறீலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினருக்கு பயிற்சிகளை வழங்கிய பிரித்தானியாவின் கினிமினி என்ற தனியார் அமைப்பின் படையினர்இ பல சந்தர்ப்பங்களில் தாக்குதல் உலங்குவானூர்திகளை செலுத்தி நேரடியான தாக்குதல்களிலும் ஈடுபட்டிருந்ததுடன் பெருமளவான அப்பாவி தமிழ் மக்களையும் சிறீலங்கா படையினருடன் இணைந்து படுகொலை செய்திருந்தனர்.

இவர்களால் பயிற்சி அளிக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் பெருமளவான நீதிக்குப் புறம்பான படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர்.

இது தொடர்பான பல ஆதாரங்கள் பிரித்தானியா அரச ஆவணங்கள் மற்றும் ஊடகவிலயலாளர் பிலிப் மில்லர் சமர்ப்பித்த ஆவணங்கள் மூலம் கிடைத்துள்ளது. இது தொடர்பில் நூல் ஒன்றையும் மில்லர் எழுதியிருந்தார்.

இந்த விசாரனைகளை பிரித்தானியாவில் உள்ள 200இ000 தமிழ் மக்கள் அவதானித்து வருவதாகவும் இவர்கள் கினி மினி அமைப்பு சிறீலங்காவில் இருந்தபோது இங்கு புகலிடத்தஞ்சம் கோரி வந்தவர்கள் எனவும் மில்லர் தெரிவித்துள்ளார்.

தமக்கு இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும்இ அதன் மீதான விசாரணைகைள ஆரம்பித்துள்ளதாகவும் பிரித்தானியா காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக பி.பி.சி ஊடகம் இன்று (30) தெரிவித்துள்ளது.