இலங்கைக்கான 2 கடன் மதிப்பாய்வுகளுக்கு IMF அனுமதி

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ், 5 ஆம் மற்றும் 6 ஆம் மதிப்பாய்வுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த மீளாய்வுகளை ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு ​நேற்று (27) கூடிய போதே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் இலங்கைக்கு இம்மாதம் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைகளுக்கு ஆதரவாக இந்த நிதி பயன்படுத்தப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.