தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவுகள் நிறைவடைந்தன

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி 7 மணிக்கு நிறைவந்தது. காலை 7 மணியில் இருந்து இரவு 7மணி வரைக்கும் வாக்கு பதிவு நடைபெற்றது. கடைசி 1 மணி நேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும்  தற்போது ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்துள்ளனர்.

5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்பு, கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக, திமுக, அமமுக-தேமுதிக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால், தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்படும் அனுப்பி வைக்கப்பட்டன. வாகனங்கள் செல்ல முடியாத மலை கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.06% வாக்குப் பதிவாகி உள்ளது. இதுவரை அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 68% வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னை 55.67, நெல்லை 56.98%, நாமக்கல் 60.33%, திருவள்ளூர் 67.77%, கிருஷ்ணகிரி 68.00%, விழுப்புரம் 67.99%, திருநெல்வேலி- 64.16%, அம்பாசமுத்திரம்- 62.94%, பாளையங்கோட்டை- 60.03%, நாங்குநேரி- 57.39%, ராதாபுரம்-65.35% வாக்குகள் பதிவாகி உள்ளது.

5 மாநிலங்களிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தமிழகம் முழுவதும் 1.8 இலட்சம் காவல்துறையினர், துணை காவல்துறையினர் உட்பட பல்வேறு பாதுகாப்பு படையினர் இதற்காக பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு உயர் பாதுகாப்பு அறையில் பூட்டி வைக்கப்படும். தமிழகத்தோடு சேர்த்து புதுச்சேரி மற்றும் கேரளாவில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், மேற்கு வங்க மாநிலத்தில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்குவங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மே 2ஆம் தேதி 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.