தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் வாக்களிக்க முடியாது

கொரோனா வைரஸ் நோயாளிகளும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களும் நாளை புதன்கிழமை தேர்தலில் வாக்களிக்கமாட்டார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மாத்திரம் தேர்தலில் வாக்களிக்கலாம் என்ற ஆலோசனையை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மாத்திரம் வாக்களிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்திசெய்தவர்களை மேலும் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். அவர்கள் மாத்திரம் தேர்தலில் வாக்களிக்க முடியும் என அனில்ஜசிங்க தெரிவித்துள்ளார்.

ஏனையவர்கள் வாக்களித்து வீடுகளுக்கு சென்ற பின்னர் மாலை நான்கு மணிக்குப் பின்னர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அதற்காகவே வாக்களிப்பு நேரம் மாலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்தவேண்டாம் எனவும் அனில்ஜசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். மருத்துவமனையிலிருந்து வெளியேறிய நோயாளிகளும் மாலை 4.00 மணிக்கு பின்னர் வாக்களிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.