ட்ரம்ப் இன் பதிவை நீக்கிய முகநூல், ருவிற்றர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன் முகநூல் பதிவை நீக்கியதுடன், ருவிற்றர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான தவறான தகவல்களைப் பதிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன் தேர்தல் பிரசார ருவிற்றர் கணக்கில் அவர் அளித்த பேட்டி பகிரப்பட்டிருந்தது. அதில் குழந்தைகளுக்கு வலுவான எதிர்ப்பு சக்தி உள்ளதால், பள்ளிகள் திறக்கலாம் எனத் தெரிவித்திருந்தார். மேலும் குழந்தைகளுக்கு கொரோனா எளிதில் பரவாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்து முற்றிலும் தவறானது என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கொரோனா குறித்த தவறான தகவலைப் பதிவிட்டதால், அவரது பதிவை நீக்க முதன்முறையாக முகநூல் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் அவரின் ருவிற்றர் பதிவிலுள்ள தவறான பதிவுகளை நீக்கினாலே அவரின் கணக்கு தொடரும் எனக் கூறி ட்ரம்ப் இன் ருவிற்றர் கணக்கை அநநிறுவனம் முடக்கியுள்ளது.