டிறம்பின் நிலை அடுத்த 48 மணிநேரத்திற்கு ஆபத்தானது – பிரதம அதிகாரி

கொரோனோ வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்பின் நிலை அடுத்த 48 மணிநேரத்திற்கு ஆபத்தானதாக இருக்கும் என அவரின் பிரதம அதிகாரி தெரிவித்துள்ளார்.

நோயின் அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து டிறம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு கடந்த இரு தினங்களாக சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனிடையே, அமெரிக்க அதிபரின் தேர்தல் பரப்புரைகளில் அவருடன் பணியாற்றிவர்களில் பலர் கொரோனோ வைரசின் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

அவர்களின் விபரம் வருமாறு:

அதிபரின் மனைவியும், முதல் பெண்மணியுமான மெலனியா டிறம்ப்

தேர்தல் பரப்புரை ஆலோசகரும் நியூஜேர்சி மாநில முன்னாள் ஆளுநருமான கிறிஸ் கிறிஸ்ரே

நெருக்கிய உதவியாளர் கோப் கிக்ஸ்

தேர்தல் பரப்புரை முகாமையாளர் பில் ஸ்ரிபெய்ன்

வெள்ளை மாளிகை முன்னாள் அதிகாரி கெலியனோ கொன்வே

றிப்பப்ளிக்கன் செனற்ரர் மைக் லீ

றிப்பப்ளிக்கன் செனற்ரர் தொம் திலிஸ்

றிப்பப்ளிக்கன் தேசிய சபையின் தலைவர் றோனா மக்டானியல்

பட உதவி: பி.பி.சி