இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து அவர்கள் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டாண்மைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இருவரும் இதன்போது வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி கூட்டாண்மையின் பல்வேறு அம்சங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் கூறுகிறது.



