உக்ரைன்- ரஸ்யா போரின் போது உக்ரைனுக்கு அமெ ரிக்கா வழங்கிய 300 தொடக் கம் 350 பில்லியன் டொலர்கள் பெறு மதியான படைத்துறை மற்றும் நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைன் தனது நாட்டில் உள்ள 500 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிம வளங்களை வழங்கவேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை(12) உக்ரைனுக்கு பயணம் மேற் கொண்ட அமெரிக்காவின் திறை சேரிச் செயலாளர் ஸ்கொட் பெசன்ற் இது தொடர்பில் உடன்பாடு ஒன்றை எட்டவேண்டும் என தான் உத்தரவிட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் வொல மிடீர் செலன்ஸ்கியிடம் அமெரிக்க அதிபரின் கோரிக்கையை தான் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாக பெசன்ற் தெரி வித்துள்ளார். இது தொடர்பில் தான் உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் பேசியதாகவும் அதற்கு அவர் சம்மதித்துள்ளதாகவும், தனக்கு முன்னைய ஜோ பைடன் அரசு அமெரிக்க மக்களின் நிதியை தவறாக பயன்படுத்தியதாகவும், அதனை மீண்டும் அமெரிக்கா பெறமுற்படுவதாகவும் டிறம் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த் தக உடன்பாடு என்ற போர்வையில் இந்த உடன்பாடு தொடர்பான ஆவணங்களும் கைச்சாத்திடப்போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதனிடையே, உக்கிரைனின் 7 றில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிம வளங்கள் உள்ளதாகவும், ஆனால் அவை டொனஸ் பகுதியில் தான் அதிகளவில் இருப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரை
னில் 2014 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்ட போது டொன்பாஸ், டொனஸ் பகுதிகள் சுதந்திரப் பிரகடனம் செய்திருந்தன. பின்னர் 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கை மூலம் ரஸ்யா அவற்றை தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத் தக்கது.



