ஜெனிவாவில் ஆதரவு கேட்டு 4 நாடுகளின் தூதுவர்களுடன் அமைச்சர் தினேஷ் சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நான்கு நாடுகளின் தூதுவர்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பில் பேச்சுக்களை நடத்தினார்.

ஜப்பான், கொரியா, பங்காளாதேஷ், பிரேஸில் ஆகிய நாடுகளின் தூதுவர்களையே நேற்று அவர் தனித்தனியாகச் சந்தித்தார் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

குறுகிய நேர அறிவித்தலுடன் அவசரம் – அவசரமாக இந்த சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிரித்தானியா தலைமையிலான இணைத் தலைமை நாடுகளால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை கொண்டுவரப்படவுள்ள இலங்கை குறித்த பிரேரணை தொடர்பில் பங்காளதேஷ், ஜப்பான், கொரியா ஆகிய நாடுகள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றன என்பது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்தப் பின்னணியில் அந்த நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனேயே குறிப்பிட்ட நாடுகளின் தூதுவர்களை அமைச்சர் அவசரமாகச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.