ஜப்பானில்  ட்விட்டர் கொலைகாரனுக்கு மரண தண்டனை

ஜப்பானில் 9 பேரை கொலை செய்த 30 வயது நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

தகஹிரோ ஷிராய்ஷி என்பவர் தான் அந்த கொலைகளை செய்தவர். ஒட்டுமொத்த ஜப்பானை உறையச் செய்த இந்த சம்பவங்கள்

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில்  தகஹிரோ ஷிராய்ஷி என்பவர், 9 பேரை கொலை செய்து, அவர்களின் தலை மற்றும் உடல் உறுப்புகளைத் தனித்தனியாக வெட்டி குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் தற்போது அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கு மரண தண்டனை வழங்கும் போது, வெறும் 16 இருக்கைகளைக் கொண்ட நீதிமன்றத்தில் 400 பேருக்கு மேல் பொதுமக்கள் இருந்தார்கள் என  ஜப்பானிய உள்ளூர் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள ஷிராய்ஷியை உள்ளூர் மக்கள் “ட்விட்டர் கில்லர்” (‘ட்விட்டர் கொலைகாரன்) என்கிறார்கள். இவர் ட்விட்டரை பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருப்போருக்கு உதவுவதாகக் கூறி, தன் வீட்டுக்கு  அழைத்து இந்த கொலைகளைச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.