ஜப்பானின் புதிய பேரரசர் பதவியேற்பு உலக தலைவர்கள் வாழ்த்து

ஜப்பானின் புதிய பேரரசராக பதவியேற்கும் நருஹித்தோவிற்கு உலகத் தலைவர்கள் அனைவரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

மக்களாட்சி நடைபெற்றாலும் அரச குடும்ப மரியாதையைப் பேணிக் காக்கும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. இதுநாள் வரை பேரரசராக இருந்து வந்த அகிஹித்தோ கடந்த மே மாதம் பதவி விலகினார். இதனையடுத்து ஜப்பானின் அடுத்த பேரரசர் யார் என்று மாபெரும் கேள்வி எழுந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவரது மகன் மக்கள் ஆதரவுடன் நருஹித்தோ பேரரசராக இன்று பதவியேற்றார்.

ஜப்பானில் இதற்காக  இன்று நடைபெற்ற முடிசூட்டு விழாவில் 150இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைவர்கள் நேரில் கலந்து கொண்டனர். மேலும் பலநாட்டு தலைவர்களும் புதிதாகப் பதவியேற்றுள்ள நருஹித்தோவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். காலம் காலமாக மரபைப் பின்பற்றும் ஜப்பானின் அரச வம்சத்தில் இவர் 126ஆவது பேரரசராகப் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.