‘செயலணியை உருவாக்கும் போது பாகுபாடுகள் பார்க்கப்படவில்லை’ ; பொய்யுரைக்கும் கமால்

செயலணியை உருவாக்கும் போது, அதில் இன, மத, மொழி பாகுபாடுகள் பார்க்கப்படவில்லை. துறைசார் நிபுணர்களே உள்ளடக்கப்பட்டுள்ளனர். நாங்கள் எந்தவொரு நேரத்திலும் இன, மத, மொழி வேறுபாடுகளை பார்த்தது கிடையாது என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (16) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறினார்.

ஆயினும் இந்த செயலணியில் தமிழரோ,அல்லது முஸ்லிம்களோ உள்ளடக்கப்ப் படவில்லை என்பதே உண்மையானதாகும்.வரலாறு,தொல்லியல் தொடர்பான துறைசார் வல்லுநர்கள் தமிழ் பேசும் சமூகத்தில் பலர் இருந்தபோதும் அவர்களில் ஒருவரேனும் இந்த செயலணியில் உள்ளடக்கப் படவில்லை என்பது வெளிப்படை.

மேலும் அண்மைக்காலமாக கிழக்குமானத்தில் வெளிப்பட்டு நிற்கும் மிகவும் கி.மு 2300 இற்கு முந்திய தமிழரின் மொழி,இருப்பு,பண்பாடு தொடர்பான ஆதாரங்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வரலாற்று கட்டுக்கதைகளுக்கு மிகப்பெரிய சவாலாக எழுந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

‘கிழக்கில் உள்ள தொல்பொருள்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணியாகும். சுமார் 1000துக்கும் அதிகமான  தொல்பொருள் சின்னங்கள் கிழக்கில் உள்ளன’ என குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது கமால் குணரத்ன குறிப்பிட்டமை நோக்கத்தக்கது.