சுவிஸ் தூதரக பணியாளரின் பயணத்தடை நீடிப்பு

இனந்தெரியாதோரால் கடத்தி, அச்சுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் இலங்கையை சேர்ந்த பணியாளருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (12) கொழும்பு பிரதான நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.அதற்கமைய எதிர்வரும் 17ஆம் திகதி வரை அவரது பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.கடந்த நவம்பர் 25ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இச்சம்பவத்தை தொடர்ந்து, கடந்த டிசம்பர் 03ஆம் திகதி அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. டிசம்பர் 09ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட குறித்த தடையுத்தரவு, பின்னர் டிசம்பர் 12 (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது.

இதேவேளை இது தொடர்பில் குறித்த பெண் CIDயில் 03 நாட்கள் தொடர்ச்சியாக வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை நாளைய தினம் (13) மீண்டும் வாக்குமூலம் வழங்குவதாக, முற்பகல் 9.30 மணிக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றிற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.