புலம்பெயர் நாட்டில் உள்ள சாட்சிகள் பேச வேண்டும் – றோய் சமாதானம் 

ஐ.நா.சபையில் இலங்கை அரசிற்கு எதிராக வழக்கு தொடுத்து அதில் வெற்றி கண்ட பின்னர், தற்போதைய சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவுக்கு எதிரான வழக்கை அமெரிக்காவில் தாக்கல் செய்து நடத்திவரும் றோய் சமாதானம் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் (கடந்த வாரத் தொடர்ச்சி)

கேள்வி- ஒரு கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டு அது நிரூபணமானால் அதியுச்ச தண்டனையாக மரண தண்டனை கூட பல நாடுகளில் நிறைவேற்றப்படுகிறது. குழந்தைகள் முதியவர்கள் உட்பட பல்லாயிரக்கண்கான உயிர்களை காவு கொண்ட குற்றவாளிகள் தெளிவான தரவுகளோடு இருந்தும் சுதந்திரமாக வெளியே திரிந்ததும் இன்று சனாதிபதியாக தேர்வாகி இருப்பதும் எவ்வகையான எண்ணங்களை தருகிறது?

பதில்– நாங்கள் வழக்குகள் தொடுப்பதற்கு நாங்கள் எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கலாம். குற்றச்சாட்டிற்கான சாட்சிகளை திரட்டுவதும், அந்தக் குற்றச்சாட்டை வைத்து வழக்கு நடத்துவதும் இரண்டு வேறுபட்ட  பணியாகும்.  நான் உணர்ச்சிவசப்பட்டு  எந்த நாட்டிலும் போய் பேசலாம். ஆனால் அதில் ஒரு பயனுமில்லை. ஏனென்றால், சட்ட ரீதியான சாட்சிகளை திரட்டி நாம் அதை செய்ய வேண்டும். எனக்கு யஸ்மின் சூக்கா போன்றவர்கள் இருப்பதால்இ நான் இதை முன்னெடுத்துச் செல்கின்றேன். ஆனால் சட்சிகள் புலம்பெயர்ந்த மக்களிடையே தான் இருக்கிறது. அவர்கள் தான் பேச வேண்டும்.

அது விடயமாக நாங்கள் தொடர்ந்து கதைத்து செய்ய வேண்டும். மரண தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு தான் போக வேண்டும்.

கோத்தபயாவை சிங்களவர்கள் ஜனாதிபதியாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றால்இ இனவாத பௌத்த இனவாதி என்பது உலக நாடுகளுக்கு தெளிவாக விளங்கியுள்ளது. தமிழ் மக்கள் எல்லோரும் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களித்ததன் மூலம் கோத்தபாய  எப்படியானவர் என்பது தெரியும். அதற்காக சஜித் நல்லவர் என்றில்லை. தமிழ் மக்கள் நல்லதொரு முடிவைக் கொடுத்துள்ளனர் என்பது உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் தெரிந்துள்ளது.

கேள்விஇந்த உலக ஒழுங்கு இப்படியே தான் போகப் போகின்றதா? அல்லது இந்த நிலமைகளில் மாற்றம் வரக் கூடிய வாய்ப்புண்டா?

பதில்– உலக ஒழுங்கில் இலங்கை ஒரு முக்கியமான தீவாக கருதப்படுகின்றது. இலங்கை சீனாவின் பாதுகாப்புள்ள ஒரு முக்கிய தளமாக இருக்கின்றது. அந்த விடயத்தில் தொடர்ச்சியான பனிப்போர் ஒன்று நடந்து கொண்டிருக்கின்றது. எனவே நாங்கள் முக்கியமானவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தினால், எங்களுக்கு சார்பான முடிவுகள் வரும். பலஸ்தீனியத்திலும்கூட எங்கள் பிரச்சினை சரியாக தெரியவந்துள்ளது. நான் அங்கு போகும் போது அறிந்தேன்.

ஆனால் இதனை மேற்கொண்ண ஊக்குவிக்க பணவசதிகள் தேவை. இவ்வாறான சேவையாற்ற ஒரு அமைப்பு ஒன்று தேவை என்பது எனது விருப்பம். தமிழர்களில் படித்த மனித உரிமை ஆர்வலர்கள் கட்டாயம் இருப்பார்கள். அவர்களை ஒன்று திரட்டி சிக்கல் இல்லாமல் செயற்படுவோமானால் நாங்கள் எவ்வளவோ செயற்பாடுகளைச் செய்யலாம்.

வவுலிமை கொண்ட உலக நாடுகளை மையமாக வைத்துக் கொண்டு காய் நகர்த்தினால், நிச்சயமாக பெரிய ஒரு வெற்றி வரும் என

நினைக்கின்றேன்.அதனால் தொடர்ந்து என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொண்டிருப்போம். என்னுடைய இலக்காக இதைத் தான் வைத்துள்ளேன். இதற்கான முயற்சியை சரியான நிறுவனத்துடன், சரியானவர்களுடன் ஆரம்பிக்க வேண்டும்.

இராஜதந்திரம், பாதுகாப்பு, புலனாய்வு என பல துறைகளில் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். உயர் மட்டத்தில் தொடர்புகளைப் பேண வேண்டும்.  நாங்கள் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றால் இதற்கு ஒப்பந்தம் செய்ய வேண்டும். அவர்களுக்கு வடக்கு கிழக்கு ஏதோ ஒரு விடயத்திற்குத் தேவையென்றால், அது தொடர்பில் நாம் கலந்துரையாட வேண்டும். எமது அரசியல் வட்டத்திற்குள் அடுத்த தலைமுறைக்கான ஒழுங்கான தலைமை இல்லை.  அதையும் உருவாக்க வேண்டும்.4 10 புலம்பெயர் நாட்டில் உள்ள சாட்சிகள் பேச வேண்டும் - றோய் சமாதானம் 

கேள்வி– நீங்கள் தொடர்ந்து இந்த வழக்கை முன்னெடுக்க வேண்டும் என்றால் புலம்பெயர் தமிழ் சமூகத்டம் இருந்து எத்தகைய உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள்?

பதில் – என்னைப் பொறுத்தவரையில், இப்படியான வழக்குகளை தொடர்ச்சியாகப் பதிவு செய்தால், அது கோத்தபயா அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும். மனித உரிமைகள் தொடர்பான தெளிவும் உலக நாடுகளிடையே ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கியமான நாடுகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும். எல்லா நாடுகளிலும் நாங்கள் ஏதோ ஒரு வழியில் இதைச் செய்ய வேண்டும். நான் சிறையிலிருந்து வந்து இறங்கியவுடன், அப்போது மனைவி பிள்ளைகள் அங்கே இருக்கின்றார்கள்.

2010இல் நான் கனடா நஷனல் போஸ்ட் என்ற ஒரு தீவிர வெள்ளையினத்தைச் சேர்ந்த பத்திரிகையுடன் பேசினேன்.  அவர்கள் அடுத்த நாள் அதை பெரியளவில் பிரசுரித்தனர். அப்போது எனது மனைவி பிள்ளைகள் நாட்டில் இருந்தனர்.  இப்போது கோத்தபயாவிற்கு எதிராக வழக்குப் போடும் போதும், மனைவியின் பெற்றோர் நாட்டில் இருந்தனர்.

சில நேரங்களில் நாங்கள் இப்படியான தியாகங்கள் செய்ய வேண்டி வரும்.என்னுடைய குடும்பம் என்று பார்த்தால் ஒன்றும் நடக்காது.இப்படியான செயற்பாடுகளில் அமைப்புகள் உதவி செய்தால் நான் முன்னின்று நடத்துவேன்.

உலகின் வலிமை மிக்க நாடுகளுடன் பேசி அவர்களை எங்களுக்கு ஆதரவாக இராஜதந்திர முறையில் பயன்படுத்தலாம் என நான் நினைக்கின்றேன்.புதிய ஜனாதிபதி சீனாவுடன் நல்லுறவை பேயுகிறார் என நினைக்கிறேன். அந்த அச்சத்தினால் தான் அவர் இந்தியாவிற்கு ஒடினார். இந்தியா அழைத்தது அவரை எச்சரிப்பதற்கும், அவருக்கு சரியான வேலைத் திட்டத்தைக் கொடுப்பதற்காகவுமே.

ஏனெனில், இந்திய இராணுவமும், இலங்கை இராணுவமும் அடுத்த மாதம் ஒரு பயிற்சியை மேற்கொள்வதாக கூறுகிறார்கள். அவர் சிங்கள மக்களுக்கு ஒன்றைக் கூறலாம். ஆனால் சர்வதேசத்தின் நிலை வேறு.

ஆனால் அதேநேரம் சர்வதேசம் தமிழர்களுக்கு உதவ வேண்டும், தமிழர்களை காப்பாற்ற வேண்டும், அவர்களுக்கு தமிழீழம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைக்கப்போவதில்லை. தங்கள் திட்டங்கள் செயற்பட வேண்டும்.அதற்கு எங்களை பயன்படுத்த வேண்டும் என்பதே சர்வதேசத்தின் நோக்கம். ஆனால் நாங்கள் அதனைத் தெரிந்து கொண்டே  எங்களின் வேலைகளை செய்து கொண்டு போகலாம்.

அமைப்புகள்  சற்று கட்டமைப்பிற்கு வெளியேயும் சிந்திக்க வேண்டும்.குறுகிய வட்டத்திற்குள் யோசித்துக் கொண்டுஇ சண்டையிட்டுக் கொண்டு இருப்பதில் ஒரு பயனுமில்லை.

என்னைப் பொறுத்தவரையில், அடுத்த கட்ட நடவடிக்கையாகஇ பல நாடுகளில் உள்ள இராஜாங்க அமைச்சு, எதிர்க்கட்சி என எல்லோருடனும் நல்ல உறவில் இருந்தால் தான், இவற்றை செய்யலாம். எனக்கு பெரியளவில் ஒருவரின் ஆதரவும் இல்லை. யஸ்மின் சூக்கா, பிரான்ஸிஸ் ஹரிசனைத் தவிர எனக்கு எவரும் ஆதரவாக இல்லை. இங்கு கனடாவில் NCCT என்ற ஒரு அமைப்பு எனக்கு கொஞ்சம் ஆதரவாக இருக்கின்றது. அது ஒரு நல்ல விடயம் .

ஐரோப்பாவில் இப்படியான செயற்திட்டங்களை செய்து, வழக்குகளை போட வேண்டும் என நினைக்கின்றேன்.