சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா பதில் கூறியே ஆகவேண்டும் – ஈரான்

ஈரானின் புரட்சிப்படைத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டும் காரணமல்ல, ஒட்டுமொத்த அமெரிக்காவுமே காரணம். இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்கு அமெரிக்கா பதில் சொல்லியே ஆக வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் 2018ஆம் ஆண்டு முதல் போர்ச் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கிய போர்த் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது.

அதைத் தொடர்ந்து ஈரான் இராணுவம், ஈராக்கில் இயங்கி வரும் அமெரிக்க இராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் நூற்றிற்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயமடைந்தனர். இவ்விரு நாடுகளும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

ஈரானுடனான மோதலையடுத்து அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத்தடை விதித்து வருகின்றது. இதன் காரணமாக ஈரானின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.