சீனா தனது அணுஆயுதங்களை இருமடங்காக்க திட்டம் – அமெரிக்கா

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் சீனா தனது அணு ஆயுதங்களை இருமடங்காக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க பென்டகன் தெரிவித்துள்ளது.

தென்சீனக் கடலில் சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பு, தைவானுக்கு அமெரிக்க ஆதரவு ஆகியவற்றால் சீனா, அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீனாவின் படைவலிமை, அணு ஆயுதங்களை பெருக்குதல் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த அணு ஆயுதங்களில் நிலம், கடல் மற்றும் வான் வழியாக ஏவுகணைகளை ஏவக்கூடியவை உள்ளடங்கும் எனவும், சீனா முதன்மையான பகுதிகளில் தனது படை வலிமையை அமெரிக்காவிற்கு சமமாகவோ, அதைவிட அதிகமாகவோ பெருக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கப்பல் கட்டுதல், ஏவுகணைகள் தயாரித்தல், ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்புக்களை நிறுவுதல் ஆகியவற்றில் சீனா முன்னேற்றம் கண்டுள்ளது. சீன இராணுவம் தனது 200இற்கும் மேற்பட்ட அணு ஆயுதக் களஞ்சியத்தை 10 ஆண்டுகளில் விரிவுபடுத்தவும், அணு சக்தி ஏவப்பட்ட ஏவுகணையை உருவாக்கவும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா தனது அணுசக்தி கையிருப்பில் குறைந்தது 200 போர்க்கப்பல்களைக் கொண்டுள்ளது என்றும் அமெரிக்கா 3,800 போர்க்கப்பல்களைக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.