சீனாவுக்கும் அமெரிக்காவுகுமிடையில் மோதல் வலுக்கின்றது

சீனாவின் தொலைதொடர்பு மற்றும் கட்டுமானப் பணிகள் உட்பட 24 நிறுவனங்கள் மீது அமெரிக்கா கொண்டுவந்த தடையை தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் சிறீலங்கா விவகாரம் தொடர்பில் முரன்பாடுகள் வலுத்துள்ளன.

கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், மாத்தளை விமானநிலையங்களை நிறுவிய இந்த நிறுவனம் மீதான தடை சிறீலங்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பதிக்கும்.

இந்த நிலையில் சீனாவும் சிறீலங்காவும் இறைமையுள்ள நாடுகள் எனவும்> அமெரிக்காவின் நடவடிக்கை அனைத்துலகவிதிகளுக்கு எதிரானது எனவும் கொழும்பில் உள்ள சீனா தூதரகம் தெரிவித்துள்ளது.

உலகத்தை அமெரிக்கா இராணுவமயப்படுத்தி வருவதாகவும், உலகில் உள்ள 70 நாடுகளில் 800 படைத்தளங்களை அமெரிக்கா கொண்டுள்ளதுடன், 165,000 படையினiயும் அது அங்கு நிறுத்தியுள்ளது. மேலும் இந்த நடவடிக்கைக்கு அது 100 பில்லியன் டொலர்களை வருடம்தோறும் செலவிட்டுவருகின்றது என அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் தளங்களை அமைப்பதற்கும், பாகிஸ்தான், இலங்கை மற்றும் மியான்மார் உட்பட பல நாடுகளில் சீனா இராணுவத்தளங்களை அமைப்பதற்கு முயன்றுவருவதாக இந்த வாரம் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்ரகன் வெளியிட்டுள்ள 200 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீனா தனது அணுவாயுதங்களை இரட்டிப்பாக்க முயல்வதுடன், மியான்மர், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, சீஷெல்ஸ், தான்சானியா, அங்கோலா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் தளங்களை அமைக்க அது முயன்று வருவகின்றது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.