சீனாவிடம் அதி நவீன ஆயுதங்கள் குளோபல் ரைம்ஸ் விளக்குகிறது

இந்தியா – சீனா இடையே 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட டோக்லாம் மோதலில் இருந்து உயரமான பகுதிகளுக்கு சென்று தாக்குதல் நடத்துவதற்கான ஆயுத பலத்தை அதிகரித்துள்ளது என சீன அரசின் அதிகாரபுர்வ ஏடான குளோபல் ரைம்ஸ் ஏடு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அக்கட்டுரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உயரமான பகுதிகளில் பயன்படுத்துவதற்கான TYPE 15 டாங்குகள், Z – 20 ஹெலிகொப்டர்கள், GJ – 2 ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் சீன இராணுவத்தின் பலத்தை உணர்த்தும் என்றும் குளோபல் ஏடு குறிப்பிட்டுள்ளது. லடாக்கில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலை மிக மோசமான மோதல் போக்கு என்றும் குளோபல் ரைம்ஸ் மேலும தெரிவித்துள்ளது.

இதனிடையே எல்லைப் பகுதியில் இரு நாட்டு இராணுவமும் சக்தி வாய்ந்த ஆயுதங்களை குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.