சில வரங்களில் கொரோன வைரசிற்கு (COVID-19) தடுப்பு மருந்து- இஸ்ரேல்

‘யாவும் திட்டத்தின்படி நடந்தால் இன்னும் சில வாரங்களில் இஸ்ரேலின் கலிலி ஆராய்ச்சி நிறுவனம் (The Galilee Research Institute (MIGAL) ) கொரோனா வைரசிற்கு எதிரான முதல் தடுப்பூசியை தயாரிக்கும் என இஸ்ரேலிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஓஃபிர் அகுனிஸ் வியாழனன்று தெய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்துள்ளார்.

கலிலியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கடந்த நான்கு ஆண்டுகளாக கோழிகளை பாதிக்கும் மூச்சுக்குழாய் அழற்சி வைரஸ்சை( IBV) எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாகவே இந்த தடுப்புமருந்து உருவாக்கம் அமைகிறது.

‘இந்த தடுப்பு மருந்து அதன் மாதிரி மருத்துவ பரிசோதனைகளை கடந்துவிட்டது’ என MIGAL இன் உயிரி தொழில்நுட்ப குழு தலைவர் டாக்டர் சென் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

‘சோதனைகளில்,இந்த வாய்வழி தடுப்பு மருந்து குறிப்பிட்ட ஐபிவி எதிர்ப்பு பிறபொருளெதிரிகளை (anti-IBV antibodies) அதிக அளவில் தூண்டுவதாக குழு கண்டறிந்தது, நாங்கள் இப்போது இந்த செயல்முறையின் நடுவில் இருக்கிறோம், சில வாரங்களில் தடுப்பூசி நம் கையில் இருக்கும் என்று நம்புகிறோம்’ எனவும் அவர் தெரிவித்தார்.

மனிதர்களுக்கு சிகிச்சைக்கான இந்த தடுப்பு மருந்தின் முதல் தொகுதி 8 முதல் 10 வாரங்களுக்குள் தயாராக இருக்கும் என குறித்த ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கிறது.