சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் காணாமல்போனவரின் மகன்

சிறீலங்கா  ஜனாதிபதி தேர்தலில் இந்த காணாமல்போனவரின் மகனான சுப்பிரமணியம் குணரத்னம் என்பவர் போட்டியிடுகின்றார்.

காணாமல்போனவரின் மகனான தமிழர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதற் தடவையாகும்.

இவர் 05.06.1973இல் கொழும்பில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் பெற்று, உயர் கல்வியை இந்தியா, தமிழ்நாடு மதுரை சேதுபதி உயர் நிலைக் கல்லூரியில் கற்று, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.

கல்வியை முடித்து 1995இல் இலங்கை திரும்பினார். அத்துடன்15 வருடங்களாக ஊடகவியலாளராக பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டுள்ளார்.

1983 இல் இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பாதுகாப்புக் கருதி குணரத்தினமும் அவரின் குடும்பத்தினரும் இந்தியா, தமிழ்நாடு சென்றனர்.

ஜனநாயக உரிமையான வாக்களிப்பை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் பிரசாரத்தை மேற்கொள்ளுவதற்காகவே தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எண்ணியதாக குறிப்பிடுகின்றார்.

இலங்கைத் தமிழர்களின் மறைக்கப்படுகின்ற, மறைக்கப்பட எத்தனிக்கின்ற காரணிகளை வெளிக்கொண்டு வரும் நோக்குடன் இந்தத் தேர்தலில் களமிறங்கியதாக அவர்  குறிப்பிடுகின்றார்.

இதனை வெளியே கொண்டுவர தேர்தலில் களமிறங்கினாலே நிறைவேற்ற முடியும் எனவும்  அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தனது தந்தை காணாமல் போனதாகவும், இன்று வரை தனது தந்தை காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.