சிறீலங்கா அரசின் இனப்பாகுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் நிகழ்வை கொரோனா வைரஸ் நெருக்கடியை காரணம்காட்டி தடுத்த சிறீலங்கா அரசும் அதன் காவல்துறையினரும், படுகொலையில் ஈடுபட்ட சிங்கள சிப்பாய்களை தென்னிலங்கையில் நினைவுகூரும் நிகழ்வில் அதனை கடைப்பிடிக்காது விட்டது சிறீலங்காவிலும் அனைத்துலக மட்டத்திலும் சிறீலங்கா அரசின் இனப்பாகுபாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

தென்னிலங்கையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறீலங்கா அரச தலைவர் கூட முகக் கவசம் அணியாது பங்குபற்றியதும், சிங்களவர்கள் எந்த சுகாதார விதிகளை பின்பற்றவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற வடமாகாண முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் சுகாதார விதிகளை காரணம் காட்டி சிறீலங்கா காவல்துறையினரால் தடுக்கப்பட்டிருந்தார்.