சிறீலங்காவுடன் நெருக்கமாகின்றது அமெரிக்கா

சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் றொபேட் சார்ள்ஸ் ஒ பிரைன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதுடன், அமெரிக்கா உதவிகளை வழங்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று (7) இடம்பெற்ற இந்த கலந்துரையாடல்களில் சிறீலங்காவுடன் அமெரிக்க கொண்டுள்ள நீண்டகால உறவு குறித்து பேசப்பட்டதுடன், சிறீலங்காவக்கு செயற்கை சுவாசக் கருவிகளை வழங்க அமெரிக்க மக்கள் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய பசுபிக் பிராந்தியத்தின் உறுதித்ததன்மைக்கு சிறீலங்கா – அமெரிக்க உறவுகள் வலுப்பட வேண்டும் என பிரைன் மேலும் தெரிவித்துள்ளார்.