சிறீலங்காவுக்கு 4.5 மில்லியன் டொலர்களை வழங்குகின்றது அமெரிக்கா

கோவிட்-19 வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சிறீலங்கா அரசுக்கு 4.5 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கவுள்ளதாக சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா தெப்லிஸ் தொவித்துள்ளார்.

நேற்று (5) சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சாவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இந்த உதவியை வழங்கியுள்ளார்.

சிறீலங்காவின் பாதுகாப்பு, இறைமை ஆகியவற்றிற்கு ஆதரவு அளிபதற்காக அமெரிக்க நீண்டகாலமாக இந்த உதவிகளை வழங்கிவருகின்றது. தற்போது கொரோனா வைரஸ் இற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட மொத்த தொகை 5.8 மில்லியன் டொலர்கள்.

கடந்த 20 வருடங்களில் சிறீலங்கா அரசுக்கு அமெரிக்கா 1 பில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது. அதில் 26 மில்லியன் சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது என அலைனா இந்த உதவி குறித்து கருத்து தெரிவிக்கும்போது தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான நடவக்கைகளுக்காக அமெரிக்க 775 மில்லியன் டொலர்களை உலக நாடுகளுக்கு வழங்க ஒதுக்கியுள்ளது.