சிறீலங்காவில் 21 மாவட்டங்களில் திங்கள் முதல் ஊரடங்கு தளர்வு..!

சிறீலங்காவில் 21 மாவட்டங்களில் ஊரடங்குச்சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (20.04.2020) முதல் தளர்த்தப்படவுள்ளது என சிறீலங்கா அமைச்சர் மஹிநதானந்த அளுத்கமகே தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இம்மாதம் இறுதிவரை ஊரடங்கு அமுலில் இருக்குமெனவும் தெரியவருகின்றது.

‘கொரோனா’ வைரஸ் தாக்கம் தொடர்பில் சுகாதார துறையினரால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அடிப்படையாகக்கொண்டே 21 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்துவதற்கும், 4 மாவட்டங்களில் நீடிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு 21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும் என்பது உட்பட கடுமையான சில நிபந்தனைகள் விதிக்கப்படவுள்ளன.