சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதலில் 23 சிறுவர்கள் பலி, 61 பேர் காயம்

சிறீலங்காவில் கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலில் 23 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்காவில் இயங்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் 18 சிறுமிகளும், 5 சிறுவர்களும் அடங்குவதுடன் இந்த தாக்குதலின் பின்னர் சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார். மேலும் 61 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 30 பேர் படுக-hயமடைந்துள்ளதுடன், 31 பேர் சிறுகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 26 சிறுவர்கள் தங்களின் பெற்றோர்களை இழந்துள்ளனர். 19 சிறுவர்கள் தாய்மார்களையும், 4 சிறுவர்கள் தந்தைகளையும் 3 சிறுவர்கள் இருவரையும் இழந்துள்ளனர்.

சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் அரசியல் மோதல்களினால் அங்கு வாழும் பொதுமக்கள் பெரும் இழப்புக்களைச் சந்தித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா அரச தலைவருக்கும், பிரதமருக்கும் இடையில் இடம்பெற்றுவரும் பனிப்போரின் விளைவாகவே புலனாய்வுத் தகவல்கள் புறக்கணிக்கப்பட்டதும், தாக்குதல் நடைபெற்றதும் நாம் அறிந்தவையே.