சிறிலங்கா தொண்டர் படையணி அதிகாரிகள் 98 பேருக்கு பதவி உயர்வு

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைவாக பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாடுகளின் பிரகாரம் முப்படைகளின் தளபதி ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் இலங்கை தொண்டர் படையணியின் 98 சிரேஸ்ட அதிகாரிகள், அடுத்த நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ செயலகம் அறிவித்துள்ளது.

அதற்கமைவாக 61 அதிகாரிகள் கப்டன் நிலையில் இருந்து மேஜர் நிலைக்கும் 19 அதிகாரிகள் மேஜர் நிலையில் இருந்து லெப்டினன்ட் கேர்ணல் நிலைக்கும் 14 அதிகாரிகள் லெப்டினன்ட் கேர்ணல் நிலையில் இருந்து கேர்ணல் நிலைக்கும் 04 அதிகாரிகள் லெப்டினன்ட் கேர்ணல் நிலையில் இருந்து கௌரவ கேர்ணல் நிலைக்கும் இலங்கை தொண்டர் படையணி வரலாற்றின் ஒரே நாளில் அதி கூடிய அளவிலான மொத்தம் 98 அதிகாரிகள் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இலங்கை தொண்டர் 1861ம் ஆண்டு சிவில் ரயிபல் குழுவாக தோற்றம் பெற்றது. பின்னர் வெளியிட்ட பிரகடனம் ஒன்றின் ஊடாக கலாற்படை சிப்பாய்களுக்கான அடிப்படையாக மாற்றம் பெற்றது. 1981 சித்திரை மாதம் 01 ம் திகதி இலங்கை தொண்டர் படையணியாக இருந்தது 1972 ம் மே மாதம் 22ம திகதி இலங்கை குடியரசாக மாறியதன் பின்னர் இலங்கை தொண்டர் படையணியாக பெயர் மாற்றம் பெற்றது.