சிறிலங்கா அமைச்சு, பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர்

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து சில அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்து வருகின்றனர்.

இந்த வகையில், நிதி அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தனது பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அதன் பிரதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரிற்கு முன்னதாக புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஐ,தே.கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த டிஜிற்றல் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சரான அஜித் பெரேராவும் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இவர்களுடன், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சரான ஹரிஸ் பெர்னான்டோவும் தனது அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சிப் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் தான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தன்னை ஆதரித்த அனைவருக்கும் அவர் நன்றி கூறியிருக்கின்றார்.