சிரியா முதல் இங்கிலாந்து வரை: ஓர் அகதிக்கு வேலை கிடைத்த கதை

Khalaf Abd, சிரியாவிலிருந்து 2013ம் ஆண்டு வெளியேறி லெபனானில் அகதியாக தஞ்சமடைந்த ஒரு மென்பொருள் பொறியாளர். இன்று இவர் இங்கிலாந்தில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
‘இங்கிலாந்து’ வாய்ப்பு கிடைத்தது எப்படி?
Image may contain: 1 person, standing, beard and outdoor
சிரியாவை பொறுத்தமட்டில் படித்த முடித்த பின்பு இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டியது கட்டாயமாகும். ஆனால் “நான் படித்து முடித்த பிறகு இராணுவத்தில் சேர விரும்பவில்லை,” என்கிறார் Abd. இதனால் லெபனானில் தஞ்சமடைந்த Abd அங்கு கட்டட தொழிலாளியாக பணியாற்றி பின்னர் ஒருவழியாக தொழில்நுட்ப துறையிலேயே வேலையை பெற்றிருக்கிறார்.
அந்த வேளையில், அகதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை லெபனான் அரசு கொண்டு வந்ததால் Abd அங்கு பணியாற்ற உரிமையற்றவராக ஆகியிருக்கிறார். பின்னர், அவரது நண்பர் மூலம் Talent Beyond Boundaries எனும் குழுவின் உதவியை நாடியிருக்கிறார் Abd.
இந்த குழு கட்டாய இடம்பெயர்வுக்கு ஆளான திறன்வாய்ந்த அகதிகளுக்கு வேலையை பெற்றுக்கொடுக்கும் உதவியை செய்து வருகிறது. இக்குழுவின் மூலம் தற்போது இங்கிலாந்தில் வேலைக்கிடைத்து அங்கு வாழ்ந்து வருகிறார் Abd.