கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 250,000ஐ நெருங்குகின்றது

சீனாவின் வூகான் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் ஆரம்பமாகிய கொரோனா வைரஸ் நோய் தற்போது உலகம் எங்கும் பரவியுள்ளதுடன், பெருமளவான உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்றது.

இன்று (3) வரையிலும் உலகில் 244,456 பேர் மரணமாகியுள்ளதுடன், 3,478,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 1,107,716 பேர் குணமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 67,285 பேரும், இத்தாலியில் 28,710 பேரும், பிரித்தானியாவில் 28,131 பேரும், ஸ்பெயினில் 25,100 பேரும், பிரான்ஸ் இல் 24,760 பேரும் மரணமடைந்துள்ளனர்.