கோத்தாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா விரும்புகின்றது – அலைனா

சிறீலங்காவில் புதிதாக பதவியேற்றுள்ள அரச தலைவர் கோத்தபாய ராஜபக்சாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா ஆவலாக உள்ளதாக சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா தெப்லிஸ் தெரிவித்துள்ளார்.

கோத்தபாயாவுடன் இணைந்து பணியாற்றி நல்ல ஆட்சி, பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகளில் முன்னேற்றம், இன ஒற்றுமை போன்ற விடயங்களில் சிறந்து விளங்கும் உறுதியான இறைமையுள்ள சிறீலங்காவை உருவாக்க அமெரிக்கா விரும்புகின்றது என அவர் தனது ருவிட்டர் தளத்தில் நேற்று (17) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த ஜனநாயக தேர்தலில் பங்கெடுத்த மக்களுக்கும் அவர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.