கொழும்பு முறைமுக நகரில் ஓமான், கட்டார், இந்திய முதலீடுகள் – அமைர்சர் அஜித் நிவார்ட் கப்ரால்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலயத்தில் வெளிநாட்டு முதலீடுகளை வரவளைப்பது தொர்பில் அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். கட்டாரிலிருந்து ஓமான் வரையிலான நாடுகளிலிருந்தும், இந்தியாவிலிருந்து முதலீடுகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராய்வதாக அமைர்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்திருக்கின்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் விஷேட தூதுவராக ஓமான், கட்டார் ஆகிய நாடுகளுக்கு அண்மையில் தான் மேற்கொண்ட விஜயங்களின் போது இது தொடர்பில் அந்த நாடுகளின் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியதாக அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறான துறைகளில் முதலீடு செய்ய முடியும் என்பதையிட்டு ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு குறிப்பிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தான் அழைப்பு விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“துறைமுக நகர் தொடர்பிலான தற்போதைய சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்தார். கோவிட் 19 பெருந்தொற்று முடிவுக்கு வந்த பின்னர் இந்திய முதலீடுகளை வரவளைப்பதற்காக அந்த நாட்டுக்கு விஜயம் செய்வதற்கு தான் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.