இந்திய மீனவர்கள் அத்துமீறல்- கடல் வளம் அழிக்கப்படுவதாக மீனவர்கள் குற்றச்சாட்டு

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் கடல் வளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ் தெரிவித்துள்ளார்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று  இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “எதிர் காலத்தில் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதீப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தலைமன்னார்,பேசாலை , சிறுத்தோப்பு போன்ற மீனவ கிராமங்களில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பலர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் கடல் வளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது!

அவர்கள் இன்று வரை விடுவிக்கப்படவும் இல்லை.விடுவிக்கப்பட்ட சில மீனவர்கள் நாட்டிற்கு திரும்ப முடியாத நிலையிலும் உள்ளனர்.

தற்போது மன்னாரில் இருந்து தொழிலுக்குச் சென்ற மீனவர்களை கடலில் வைத்து கடற்படையினர் தாக்கி துன்புறுத்திய சம்பவங்கள் உள்ளது.இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதீக்கப்பட்டுள்ளது.

பாதீக்கப்பட்ட மீனவர்கள் தொடர்பாகவும்,கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பாகவும் கடற்தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமல் உள்ளமை வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே வடக்கு மீனவர்கள் தொடர்பாகவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்”என அவர் மேலும் தெரிவித்தார்.