கொழும்பு துறைமுக விவகாரம் –  அதானி நிறுவனத்துடன் சிறீலங்கா நேரடி தொடர்பில் உள்ளது – இந்தியா

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய திட்டத்திற்காக சிறீலங்கா அரசாங்கம் இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் நேரடி தொடர்புகளில் உள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதுடில்லியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் அதானி நிறுவனம் வழங்கிய யோசனையை, சிறீலங்காவில் உள்ள இந்திய துாதரகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சிறீலங்கா வெளியிட்ட கருத்து இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு இத்திட்டம் தொடர்பில் அதானி நிறுவனத்துடன் சிறீலங்கா அரசாங்கம் நேரடியாக தொடர்பு பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.