கொரோனா காலத்தில் உலகளவில் கஞ்சா பயன்பாடு அதிகரிப்பு – ஐ.நா தகவல்

கடந்த 2020ஆம் ஆண்டு சுமார் 275 மில்லியன் பேர் போதை மருந்து உட்கொண்டுள்ளதாகவும் 36 மில்லியன் பேர் போதை மருந்துகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போதை மருந்து மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் அறிக்கையில், குறிப்பிட்டுள்ளது.

மேலும், கடந்த 24 வருடங்களில் இல்லாத அளவுக்குக் கொரோனா தொற்று காலத்தில் கஞ்சா பயன்பாடு 4 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், உலகம் முழுவதும் 77 நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில்,42 சதவீதம் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2010 -2019 வரை போதை மருந்து பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை 22 மடங்கு அதிகரித்துள்ளதாவும், இந்நிலையில், தற்போதைய கணிப்பின்படி 2030 ஆம் ஆண்டுக்குள் போதை மருந்துப் பயன்பாடு, மேலும் 11 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.