கொச்சிக்கடை தேவாலயத்திற்கு சென்ற பொம்பியோ

சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ கடந்த ஆண்டு புனித ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலில் அதிகளவு மக்கள் கொல்லப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்.

அமெரிக்கா பாதுகாப்பு படையினரின் அதி உயர் பாதுகாப்புடன் சென்ற பொம்பியோ தேவாலயத்தின் மதகுருவையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.