தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இம்முறையும் போராட்டம்!

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று (24) இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் எனக் காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (23) ஆரம்பித்த போராட்டம் இன்றைய தினம் மாலை வரையில் இரண்டு நாட்கள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அதிகளவான காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் தையிட்டி காணி விவகாரம் தொடர்பில் அடுத்த மாதம் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட உள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.