இந்திய பிரதமருடன் தனியாக பேச சம்பந்தர் ஆர்வம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனியாக சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் பேசுவதற்கு விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் சிறீலங்காவிவுக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லேயிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை(29), இந்திய தூதுவருடன் அவரின் இல்லத்தில் இடம்பெற்ற பேச்சக்களின் போதே சம்பந்தர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் சிறீலங்கா அரசு உள்ளது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையை தீர்ப்பதற்கு இந்திய பிரதமரை சந்திக்க வேண்டும். 1.2 பில்லியன் ரூபாய்கள் செலவில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கலாச்சார நிலையத்தை திறப்பதற்கு இந்திய பிரதமர் வருகை தரவேண்டும் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எனினும் சம்பந்தரின் இந்த கோரிக்கைகளை தான் இந்திய பிரதமரிடம் தெரிவிப்பதாக கோபால் தெரிவித்துள்ளார்.