கொழும்பு துறைமுகம் குறித்து அதானி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை – சிறீலங்கா அமைச்சர் தகவல்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய முதலீடு திட்டம் குறித்து, அதானி நிறுவனத்துடன் சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய முதலீடு திட்டம் குறித்து, அதானி நிறுவனத்துடன் சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதய கம்மன்பில, கொழும்பு துறைமுகத்தில் முதலீடு செய்ய அதானி குழும நிறுவனங்களை இந்திய அரசு பரிந்துரைத்ததாக தெரிவித்துள்ளார்.

இதை ஏற்று அதானி குழும நிறுவனங்களுடன் சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தையை நடத்தியதாக கூறினார். மேலும், சிறீலங்காவின் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியாவுக்கு தப்பிசென்றதாக கூறப்படும் சாரா ஜெஸ்மின் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மட்டக்களப்பை சேர்ந்த அவரை கைது செய்வது தொடர்பாக, இந்தியாவிடம்  உதவி கோரப்படும் எனவும் அவர்  கூறியுள்ளார்.