காணாமல்போனவர்களின் உறவுகளை படையினர் கண்காணிக்கின்றனர் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

கண்காணிப்பகம்சிறீலங்கா அரசினாலும் அதன் படையினராலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சிறீலங்கா படையினர் அதிகளவில் கண்காணித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிறீலங்கா படையினரும்இ புலனாய்வு பிரிவினரும்இ வலிந்து காணாமாமல்போனவர்களின் உறவுகளையும்இ அவர்களுக்கு ஆதரவு வழங்குபவர்களையும் அவர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களையும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்இ சிறீலங்காவின் அரச தலைவராக கேத்தபாயா ராஜபக்சா பதவியேற்ற பின்னரே இவ்வாறான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக அது தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.