அமெரிக்காவின் தடை விவகாரம் – ஜஸ்மின் சூக்கா மீது சிறீலங்கா பாச்சல்

சிறீலங்கா விவகாரங்களில் தலையிடுவதற்காகவே ஐரோப்பிய ஒன்றியம் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நிதியை வழங்கிவருவதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு ஐரோப்பிய ஒன்றியம் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சவீந்திர சில்வா மீது அமெரிக்கா கொண்டுவந்த பயணத்தடையை தொடர்ந்து சிறீலங்கா அரசு கடுமையான அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.அதன் விளைவான சிறீலங்கா விவகாரங்களில் ஈடுபடும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது சிறீலங்கா அரசு கடும் அதிதிருப்தி அடைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பணியாளராக பணியாற்றும் ஜஸ்மின் சூக்கா சிறீலங்கா விவகாரங்களில் தரையிடுவதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தின் பணியாளரான ஜஸ்மின் சூக்காவுக்கு தென்ஆபிரிக்கவில் மக்களின் நல்வாழ்வு தொடர்பான பணிகளையே ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியிருந்தது. ஆனால் அவர் சிறீலங்கா விவகாரங்களில் தலையிட்டு வருவதாக சிறீலங்கா தெரிவித்துள்ளது.

மேலும் தமது கேள்விகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விளக்கம் தரவேண்டும் என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.ஆனால் ஜஸ்மின் சூக்கா மற்றும் பிரான்சிஸ் கரிசன் ஆகியோர் இணைந்து உண்மைக்கும்இ நீதிக்குமான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பை நடத்திவருவதுடன்இ சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். இதுவரை 351 பேர்களின் தகவல்களை அவர்கள் சேகரித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.