ஏப்பிரல் 25 சிறீலங்காவில் பொதுத்தேர்தல்

மார்ச் மாதம் 2 ஆம் நாள் நள்ளிரவில் சிறீலங்கா நாடாளுமன்றத்தை அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா கலைக்கவுள்ளதாகவும்இ ஏப்பிரல் 25 ஆம் நாள் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாகவும்  சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

மார்ச் 12 ஆம் நாளில் இருந்து 19 ஆம் நாள் வரையிலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கால எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தென்னிலங்கையில் தேர்தலை சந்திப்பதற்கு இரு பெரும் சிங்களக் கட்சிகளும் தயாராகி வருகையில் தமிழ் கட்சிகள் பல பிளவுகளைச் சந்தித்துள்ளது தமிழ் மக்களுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையேஇ கடந்த வருடம் இடம்பெற்ற அரச தலைவர் தேர்தல் செலவுகளின் மிகுதிப் பணமான ஒரு பில்லியன் ரூபாய்களை அரசு தமக்கு தரவேண்டும் என சிறீலங்கா தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத்தேர்தல் செலவுகள் 6 பில்லியன் ரூபாய்கள் என அது மேலும் தெரிவித்துள்ளது.